வாக்குமூலம், காவல்துறை துன்புறுத்தலா? சற்றுமுன் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் நேரடியாக கூறிய வார்த்தை! - Seithipunal
Seithipunal


கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கருக்கு மேலும் பதினைந்து நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து, மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் தேனி மாவட்டத்தின் ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது, அவரின் அறையில்  இரண்டரை கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

அவர் மீது மூன்று பிரிவுகள் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அவரின் உதவியாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி போலீஸ்காவலில் எடுத்து விசாரணை செய்ய மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. 

அதன்படி இரண்டு நாட்கள் போலீஸ்காவல் விசாரணை முடிந்து, இன்று நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு மேலும் பதினைந்து நாட்கள் நீதிமன்ற காவல் நீடித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி சவுக்கு சங்கரிடம், உங்களுக்கு ஏதாவது காவல்துறை தரப்பிலிருந்து துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்ததா என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த சவுக்கு சங்கர், காவல் துறை விசாரணையில் எனக்கு எந்த விதமான துன்புறுத்தல்களும் ஏற்படவில்லை. மனரீதியாகவும் தான் துன்புறுத்தப்படவில்லை என்பதை தெரிவித்தார்.

மேலும் நான் காவல்துறைக்கு எந்த வாக்கு மூலத்தையும் கொடுக்கவில்லை என்றும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இன்னும் சற்று நேரத்தில் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறைக்கு பெண் போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku shankar case madurai court order may


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->