குண்டாசை வாபஸ் பெற்றதால் தப்பித்தீர்கள்! தமிழக அரசுக்கு கையை உயர்த்தி வார்னிங் கொடுத்த SC தலைமை நீதிபதி! - Seithipunal
Seithipunal


சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது.

சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

அதை ஏற்ற நீதிபதிகள், சவுக்கு சங்கர் விவகாரத்தில் நீங்களாக குண்டர் சட்டத்தை வாபஸ் பெற்றதால் தப்பித்தீர்கள், இல்லையென்றால் நாங்கள் உங்களுக்கு எதிராக கடுமையான உத்தரவை பிறப்பித்திருப்போம் என்று தெரிவித்த ஒரு காணொளி வைரலாகி வருகிறது.

மேலும், எப்போது விடுதலை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வேறு ஏதும் வழக்குகளில் சிறையில் வைக்க தேவையில்லாத பட்சத்தில் இன்றே விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

காணொளியில் 2.01 நேரம் பார்க்க!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar Case Viral Video


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->