சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கரின் தாய் கமலா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

இந்த வழக்குகளில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகிவரும் சவுக்கு சங்கருக்கு ஜாமின் கிடைத்து வருகிறது.

இதற்கிடையே, சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி, சவுக்கு சங்கரின் தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அமர்வு, சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து உத்தரவிட்டனர்.

இதேபோல் ,  தன்மீது பதியப்பட்ட 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக்கோரி சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மற்றொரு வழக்கில், காவல் துறை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar Gundas Case Chennai HC Order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->