யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் காவல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. 

சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்த பல்வேறு வழக்குகள் பதிவான நிலையில் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து நேற்று சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதற்கான உத்தரவை சிறையில் இருந்த சவுக்கு சங்கரிடம் சென்னை போலீசார் வழங்கினர். 

இந்நிலையில் சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை நான்காவது குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

நாளை மாலை 5 மணி வரை சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் மனு அளித்திருந்த நிலையில் ஒருநாள் அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar one day police custody


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->