அமைச்சர் உதயநிதிதான் காரணம்...! சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி!
Savukku Shankar press meet in salem
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
அதில் ஒரு வழக்கானது, உதகை புதுமந்து காவல்நிலைய ஆய்வாளர் அல்லி ராணி என்பவர் அளித்த புகாரில், சவுக்கு சங்கர் மீது, உதகை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்கில் உதகை நீதிபதி, ஒருநாள் மட்டும் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். அதன் படி போலீசார் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
போலீஸ் வேனில் சென்னை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர் வாழப்பாடி அருகே சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவருக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையே ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து போலீஸ் வேனில் ஏறும் வாழையில் செய்தியாளர்களை பார்த்து சவுக்கு சங்கர் தெரிவிக்கையில், என்னுடைய கைதுக்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்.
அமைச்சர் உதயநிதி தூண்டுதலின் பேரிலேயே என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் ஆத்தூர் பகுதியில் சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
English Summary
Savukku Shankar press meet in salem