ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் - கேமராவை பார்த்ததும் கொந்தளித்த சவுக்கு சங்கர்! - Seithipunal
Seithipunal


பொய் வழக்குகள் போடும் கவனம் கள்ளச்சாராயத்தில் இருந்திருக்கலாம் என்றும், கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும் என்றும், போலீசார் அழைத்து செல்லும்போது, கேமராவை பார்த்து சவுக்கு சங்கர் கத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜரான பின் மீண்டும் சிறைக்கு சவுக்கு சங்கரை போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்போது சவுக்கு சங்கர் அங்கு வழியில் செய்தியாளர்களின் கேமராவை பார்த்ததும், “கள்ளச்சாராய சாவுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை கள்ளச்சாராயத்தால் 55 பேர் உயிரிழந்துள்ளது தமிழக அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது” என்று முழக்கமிட்டார்.

மேலும், தமிழக அரசு பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் மேற்கொள்வில்லை. அதன் விளைவுதான் இன்று இத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த மரணங்கள், அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar Say CM Stalin Resign Kallakurichi Kallasarayam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->