நாளை வரை கெடு.. ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை.!!
SC warning to governor Ravi in ponmudi otta case
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த பொன்முடி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் அவருக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
இதனை அடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் பொன்முடி செயல்படுவார் என சபாநாயகர் அப்பாவு அறிவிக்க மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு பரிந்துரை செய்தார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் பொன்முடி நிரபராதி என நிரூபிக்கப்படவில்லை மேலும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருக்கக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பு வழங்கியிருக்கலாம் எனக் கூறி முதல்வர் மு.க ஸ்டாலின பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார்.
இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வை முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்ய மறப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூற முடியும்? ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஆளுநர் சார்பாக ஆஜரான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலிடம் உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
தமிழக ஆளுநர் ரவிக்கு நாளை வரை நேரம் தருகிறோம். இல்லையென்றால்.. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு உத்தரவு பிறப்பிக்கவை நேரிடும் அது என்ன என்பது நாங்கள் இப்போது சொல்லப் போவதில்லை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
SC warning to governor Ravi in ponmudi otta case