பட்டியலின மக்கள் கோவிலில் சாமியை வழிபட ஆதிக்கசாதியினர் எதிர்ப்பு..பட்டியலின மக்கள் சாலை மறியல்!!
Schedule caste people temple not allowed scheduled people block the road
புதுக்கோட்டை மாவட்டம் சிவந்தான்பட்டி பிடாரி அம்மன் கோயில் திருவிழாவில் பட்டியலின மக்கள் வழிபட அனுமதி மறுத்தாதல் போராட்டத்தில் இறங்கிய பட்டியலின மக்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் சிவந்தான்பாட்டி ஊராட்சியில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. பிடாரி அம்மன் கோவில் திருவிழாவில் முன்னோர் காலத்தில் சேர்ந்து வழிபட்டதாக கூறப்படிகிறது. கால சூழ்ற்சியில் அந்த முறை கைவிடபட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலை, இந்தாண்டு நடைபெற்று வரும் திருவிழாவில் பட்டியலின மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த பட்டியலின மக்கள் கந்தர்வகோட்டை சாலையில் 50ம் மேற்பட்ட பட்டியலின மக்கள் மரகட்டைகளையும்கற்களையும் சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதனால், கந்தர்வகோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்குவந்த போலீசார் மக்களை அப்புறப்பட முயற்சித்து வருகினர்.
சிவந்தான்பட்டி பிடாரி அம்மன் கோவியிலில் பட்டியலின மக்களை நிரந்தரமாக வழிபட அனுமதிக்குமாறு பட்டியலின மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Schedule caste people temple not allowed scheduled people block the road