புயல் பாதிப்பு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதிலும் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். இதற்கிடையே சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

இந்த சூழலில் தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், மீட்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல், கடலூர், பண்ட்ருட்டி, அண்ணா கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and college leave in vilupuram and cuddalore district


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->