தென்காசியில் பள்ளிக், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் - ஆட்சியர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தற்போது, மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. இந்தப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்பில் இருந்து தென்காசி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதால் பள்ளி, கல்லூரிகள் நாளை (21.12.2023) வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and college no leave in tenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->