3 மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. 

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், முக்கிய சாலைகள் மற்றும் பிரதான நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன.

இந்த மாவட்டங்களில் தற்போது, வெள்ளம் வடிய தொடங்கியுள்ள நிலையில், முழுமையாக நிலைமை சீரடைய இரண்டு நாட்களுக்கும் மேல் ஆகலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது மீண்டும் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and colleges holiday in three districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->