நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை முன்கூட்டியே அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை அடுத்து அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆகவே இடையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்ந்து மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தீபாவளி மறுநாள் அதாவது நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்தது.

இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை (09-11-2024) வேலைநாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் நாளை (9ம் தேதி) முழு நேரம் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school and colleges tomarrow working day in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->