கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
school college leave for rain in tamilnadu dishtricts
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வும் தெரிவித்திருந்தது.
அதிலும் குறிப்பாக அடுத்த நான்கு நாட்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
school college leave for rain in tamilnadu dishtricts