சென்னையில் சோகம்... தவறான சிகிச்சையால் பள்ளி மாணவி உயிரிழப்பு..!!
School girl dies due to wrong treatment in Chennai
சென்னை திருவெற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் நந்தினி, இவருடைய மகள் அபிநயா சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டதால் திருவொற்றியூர் உள்ள தனியார் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் அபிநயாவை அவர் தாயார் அழைத்துச் சென்றுள்ளார். அபிநயாவை சோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காலை அபிநயாவுக்கு மருத்துவமனையில் காதில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சை நடந்த அரை மணி நேரத்தில் அபிநயா தனக்கு நெஞ்சுவலி ஏற்படுவதாக தனது தாயிடம் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மூச்சுத் திணறல் அதிகமானதால் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி அபிநயா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் தாய் நந்தினி மற்றும் உறவினர்கள் திருவெற்றியூர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூக்கடை துணை கமிஷ்னர் ஜான் ஆல்பர்ட் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டத.
English Summary
School girl dies due to wrong treatment in Chennai