பேருந்தில் நகையை தவறவிட்ட மூதாட்டி.. கவனித்த பள்ளி மாணவிகள் செய்த செயல்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் பகுதியில் நகையை தவறவிட்ட மூதாட்டியிடம் பள்ளி மாணவிகள் நகையை மீட்டு ஒப்படைத்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மைக்கேல் சாதனா மற்றும் பவித்ரா தேவி என்ற இரு மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் மோசமாக இருப்பதால் இப்பள்ளி மாணவிகளுக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 

இதனால், பள்ளி மாணவிகள் பேருந்து மூலம் சிறு தொண்ட நல்லூர் அரசு முத்துமாலை அம்மன் பள்ளிக்கு சென்று இவர்களுக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பில் பாடம் படித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இன்று காலை வழக்கம் போல ஏரலில் இருந்து பேருந்தில் சென்றபோது பஸ்ஸில் ஒரு பை கிடப்பதை அந்த மாணவிகள் இருவரும் பார்த்துள்ளனர். 

அந்த பையில் தங்க நகை இருப்பதை கண்ட மாணவிகள் பள்ளிக்கு சென்றதும் தங்கள் தலைமை ஆசிரியர் விஜிலா மேரியிடம் பேருந்தில் கடந்த நகையை கொடுத்தனர். இதனை தொடர்ந்து, தலைமை ஆசிரியை காவல் நிலையத்திற்கு சென்று நகையை ஒப்படைத்தார். 

அந்த மாணவிகளை அழைத்து காவல்துறையினர் பொன்னாடை போர்த்தி பாராட்டினர். பின்னர், அவர்களது கையாலையே நகையை தவறவிட்ட மூதாட்டி லட்சுமியிடம் நகை ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மாணவிகள் இருவருக்கும் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school girls found gold chain missed in bus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->