விடாது விரட்டும் மழை - நீலகிரியில் இரண்டு தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைய தொடங்கி இருப்பதுடன், தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் மூன்று  நாட்களுக்கு பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். 

மேலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என்றும் சேதம் குறித்த தகவல்களை தொடர்ந்து சேகரித்து வருவதாகவும் விடுமுறை தேவைப்பட்டால் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school holiday to two taluk in nilgiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->