பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி.. மே இறுதி வரை.. கலெக்டர் ஆர்த்தி தகவல்..!
School not going children census work Until the end of May in kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு மே இறுதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையின் கீழ், அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சிகளின் குடியிருப்புகளில் பள்ளி செல்லா, இடைநின்ற, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது.
இந்த கணக்கெடுப்பு பணியில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கல்வி தன்னார்வலர்கள், ஆகியோர் ஈடுபடுகிறார்கள்.
எனவே கணக்கெடுப்புப்பணிக்கு பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் பொது மக்கள் எவரேனும், பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த விவரங்களை dpckanchi@Yahoo.co.in அல்லது 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
School not going children census work Until the end of May in kanchipuram