பள்ளிகள் திறப்பில் தாமதம்..மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை! - Seithipunal
Seithipunal


வழக்கமாக பள்ளி முழு ஆண்டுத்தேர்வு, கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த மே 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிற மாநிலங்களில் தேர்தல் நடந்து கொண்டிருப்பதாலும், தேர்தல் முடிவு வரும் ஜூன் 4ம் தேதி வெளியாகவுள்ளதாலும் இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு தாமதமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் கத்திரி வெயிலின் தாக்கமும் இந்த ஆண்டு மிக அதிகளவில் உள்ளது.

மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தலைமையில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வரும் ஜூன் 10ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள பாடநூல்கள், சீருடைகள் ஆகியவை தயார்நிலையில் உள்ளதாகவும், ஒருவேளை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தால் அதற்கேற்ப பள்ளிகள் திறப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School reopen late chance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->