வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன் - பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி.! - Seithipunal
Seithipunal


வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மாணவன் - பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி.!

சென்னையில் உள்ள பெரம்பூர் அருகே பொன்னப்பர் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி விடுமுறை நாட்களில் திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும் வேலைக்கு சென்று வருவது வழக்கம். 

அந்த வகையில் ராஜேஷ் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் சமையல் வேலை செய்து வந்தார். அங்கு வேலை முடிந்த பின்னர் ராஜேஷ் தன்னுடன் வேலை செய்த செந்தில்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். 

இதையடுத்து இவர் மாதவரம் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மாநகர பேருந்து ராஜேஷ் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலையில் விழுந்த ராஜேஷ் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது.இதனால், ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும். செந்தில்குமார் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பலியான ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பேருந்து ஓட்டுனரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும்போது விபத்தில் சிக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died for accident in chennai mathavaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->