மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி - தந்தை படுகாயம்..! - Seithipunal
Seithipunal


முசிறி அருகே மின்னல் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே சாலப்பட்டி கிராம பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் திவாகர். இவர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கூலி தொழிலாளியான தங்கராசு தனது மகன் திவாகருடன், பெரமூர் பகுதியில் உள்ள கோரை வயலில் காய வைத்திருந்த கோரையை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் தங்கராசு கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த திவாகர் சம்பவம் குறித்து உறவினர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்தபோது, அவர் மீதும் மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனே உறவினர்கள் வயலுக்கு விரைந்து சென்று பார்த்தபோது திவாகரன் பிணமாக கிடந்ததை கண்டு கதறி அழுதனர். பின்னர் பலத்த காயம் அடைந்த தங்கராசுவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்னல் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died for lightning attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->