கரூரில் சோகம் - பள்ளி திறந்த முதல் நாளிலேயே தற்கொலை செய்த மாணவர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள, குளித்தலை அருகே கருங்கலாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் மகேந்திரன். இவர் கோமாளி பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 

இவர் 9-ம் வகுப்புத் தேர்வு முடிவில் தேர்ச்சி ஆகாமல் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேந்திரன் பள்ளி திறப்பு நாளான நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி திறந்த முதல் நாளிலே ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in karur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->