ஒரு நாள் தலைமையாசிரியர் - அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.! - Seithipunal
Seithipunal


ஒரு நாள் தலைமையாசிரியர் - அரசு பள்ளியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை 276 மாணவர்கள் படித்து வருகின்றனர். 

இந்த பள்ளியில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவர் ஒருநாள் பள்ளி தலைமை ஆசிரியராகவும், 2வது மதிப்பெண் பெரும் மாணவர் உதவி தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வழங்கப்படும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் பள்ளி மாணவர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன் படி நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற தர்ஷன் மற்றும் இரண்டாவது மதிப்பெண் பெற்ற கவின்ராஜ் உள்ளிட்ட இருவரையும், தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர். அதன் பின்னர் இரு மாணவர்களுக்கும் சால்வை போர்த்தி மரியாதை செலுத்தி இருக்கையில் அமர வைத்தனர்.

இது தொடர்பாக ஒரு நாள் தலைமை ஆசிரியரான தர்ஷன் தெரிவித்ததாவது, ”பள்ளி மாணவ மாணவிகள் இடையே கல்வி ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி கிருஷ்ணன் கூறியது எங்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. 

இதனால், நான் நன்றாக படித்து பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளேன். எனக்கு இன்று ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் மற்ற அரசு பள்ளிகளிலும் நடந்தால் எங்களைப் போன்ற மாணவர்களிடையே கல்வியை கற்பதில் ஆர்வமும் ஊக்கமும் ஏற்படும் “ என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school students become one day head master in makinampatti govt school


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->