காஞ்சிபுரத்தில் பரபரப்பு! இரவில் மழைநீர் கால்வாய் மீது.. பள்ளி மாணவர்களுக்கு அரங்கேறி கொடுமை! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் உண்ண உணவின்றி, உறங்க இடமின்றி மழைநீர் கால்வாய் மீது இரவில் உறங்கிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது!

காஞ்சிபுரம் ரயில்வே சாலை அமைந்துள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கியது. ஆண்களுக்கான முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்ற நிலையில் இரவு 11 மணி வரை நீடித்துள்ளது. 

இதனால் விளையாட்டு போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மைதானத்தில் உள்ள சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மழை நீர் வடிகால்வாய் மீது இரவு முழுவதும் படுத்து உறங்கியுள்ளனர். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு முறையான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்காமல் ஒரு பாத்திரத்தில் குடிநீர் பிடித்து வைத்திருந்ததாகவும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் .

இரண்டாம் நாளான இன்று பெண்களுக்கான போட்டிகள் நடைபெற உள்ளதால் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர்கள் தெரிவித்ததால் மாணவர்கள் தங்க இருப்பிடம், குடிநீர், உணவு, கழிப்பிட வசதி ஆகியவற்றை செய்து தர வேண்டும் என விளையாட்டு வீரர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கால் விளையாட்டு வீரர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரவில் கொசுக்கடியில் மழைநீர் வடிகால் மீது விளையாட்டு வீரர்கள் உறங்குவதால் இதனால் விளையாட்டு வீரர்களின் உடல்நலம் பாதிக்கு கூடும் என்பதால் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School students sleep on water drain platform in Kanchipuram on yesterday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->