பள்ளியில் ஏற்பட்ட அதிர்ச்சி..மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.. உணவில் கலந்தது என்ன? - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அடுத்த மோத்தக்கல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். 

இப்பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் பள்ளியில் சத்துணவு வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில், இன்று வழக்கம்போல் மாணவர்கள் மதிய உணவு  சாப்பிட்டனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 37 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் 37 பேரையும் மீட்டு அருகில் உள்ள ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

அங்கு, 37 மாணவர்களும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கூடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட அந்த உணவு மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school students vomiting and unconsious teachers shock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->