குன்னூர் || சத்தம் கேட்டு ஓடி வந்த பள்ளி ஆசிரியை - நிலச்சரிவில் சிக்கி பலி.!
school teacher died for landslide in kunnur
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில், சாலையோரம் இருந்த மரங்கள், மின்கம்பியில் சாய்ந்தபடி முறிந்து விழுந்ததால் அந்த பகுதிகளில் மின்சாரம் மற்றும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், கனமழையின்போது குன்னூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த தனியார் பள்ளி ஆசிரியை மண் சரிவில் சிக்கிக்கொண்டார். உடனே அவர் சத்தமிட்டு கூச்சலிட்டார். இந்தச் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரது கணவர் ரவி, மகள்கள் வர்ஷா, வையூ ஆகியோர் வெளியே வந்ததனால் அவர்களும் மண் சரிவில் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து மண் சரிவில் சிக்கி கொண்ட ஆசிரியையின் கணவர் மற்றும் 2 மகள்களை உயிருடன் மீட்டனர். ஆனால், மண் சரிவில் சிக்கிய ஜெயலட்சுமி மூச்சுத்திணறி மண்ணுக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தீயணைப்பு படையினர் அவரது உடலை 3 மணி நேரம் போராடி மீட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
school teacher died for landslide in kunnur