9 வயது பள்ளி சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்.. போக்சோவில் கைது.!
School teacher sexual harassment for 9 year old girl
திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுக்கா சட்டுவநாதாங்கல் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள் நான்காம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியை, அதே பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர் சிறுமியின் ஆடைகளை களைந்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமியை தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் இனிமேல் நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியரான ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
School teacher sexual harassment for 9 year old girl