நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தில் தற்போது மழைப்பொழிவு முற்றிலும் நின்றுள்ளது. இதையடுத்து நெல்லையில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடியில் அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், நேற்று அடைமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில், 11 மாவட்டங்களில் இன்று (டிச.,14) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளதுதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் தற்போது மழைப்பொழிவு முற்றிலும் நின்றுள்ளது. இதையடுத்து நெல்லையில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

அதே சமயம், தாமிரபரணி கரையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். பள்ளிகளில் நீர் தேங்கியிருந்தால் முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்து விடுமுறை அளிக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Schools and colleges will function as usual tomorrow


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->