இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்.. தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்.!
Sea unknown persons attack TN fishermen
இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் 6 பேரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தாலும் அவர்கள் அத்துமீறி கைது செய்து வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சனை காலம் காலமாக தொடர்ந்தாலும் கூட இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.
அதேபோல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் பகுதிகளில் கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி, மீனவர்களின் வலை மற்றும் மீன்களை பறித்து செல்லும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் ஆற்காட்டு துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மயில் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று இரவு 3 பைபர் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, 800 கிலோ மீன் பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட ஐந்து லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றுள்ளனர்.
மேலும் தமிழக மீனவர்களை கம்பி கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த தமிழக மீனவர்கள் 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
English Summary
Sea unknown persons attack TN fishermen