கடல் சீற்றத்தால் கவிழ்ந்த படகு.! மாயமான மீனவரை தேடும் பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரை தேடும் பணியில் கடலோர போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கொட்டயமேடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் பெருமாள்(43). இவர் அதே பகுதியை சேர்ந்த நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோருடன் இன்று காலை படகில் மீன் பிடிக்க சென்றார். இந்நிலையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றத்தால், சில அடி தூரம் எழுந்த ராட்சத அலையால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நடராஜன் மற்றும் சூரியமூர்த்தி கடலில் தத்தளித்த நிலையில், அப்பொழுது அங்கு மற்றொரு படகில் வந்த மீனவர்கள் இரண்டு பேரையும் மீட்டனர். ஆனால் பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார். இதையடுத்து நடராஜன் மற்றும் சூரிய மூர்த்தியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படையினர், மீனவர்கள் உதவியுடன் கடலில் மாயமான பெருமாளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கடலில் மூழ்கி மாயமான பெருமாளின் கதி என்னவென்று தெரியாத நிலையில், அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Search is underway for the missing fisherman whose boat capsized due to rough seas


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->