தொழிலதிபர் வீட்டில் இறந்து கிடந்த 3 பேர்: பின்னணியில் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


சேலம், இந்திரா நகரை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் 3 பேர் ஒரே சமயத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொழிலதிபர் வெங்கடேஸ்வரன் (வயது 54), இவரது மகன் ரிஷிகேஷ்வரன் (வயது 30), மகள் பூஜா (வயது 23) ஆகிய மூன்று பேரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தந்தை, மகன் இருவரையும் இறந்த நிலையில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் மகளின் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் படுக்கையில் உயிரிழந்த கிடந்தார். வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது மகன் இருவரும் நோட் புத்தகங்களை ஒட்ட பயன்படுத்தப்படும் கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வந்தனர். 

அதிக அளவில் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாததால் மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இருப்பினும் மூன்று பேரின் இறப்பில் மர்மம் நீடிப்பதால் போலீசார் அவரது மனைவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selam businessman house 3 people dead 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->