கேக் சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்! கடை உரிமையாளரை சுத்து போட்ட போலீசார்! - Seithipunal
Seithipunal


சேலம், மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி அரசு பள்ளி எதிரே உள்ள பேக்கரியில் பள்ளி மாணவ-மாணவிகள் நாள்தோறும் பல்வேறு உணவு பொருட்களை வாங்கி சுவைத்து வருகின்றனர். 

இந்நிலையில் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரது மகள் வித்யா ஸ்ரீ (வயது 2) நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாட இந்த பேக்கரியில் இருந்து கேக் வாங்கி சென்றுள்ளனர். 

பிறந்த நாளை முன்னிட்டு உறவினர்கள் அனைவரும் கேக் வெட்டி சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் வித்யா ஸ்ரீ உள்பட கேக் சாப்பிட்ட 5 சிறுவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து குழந்தைகளை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் வீட்டிற்கு வந்து கேக்கை பரிசோதித்த போது ஒருவித துர்நாற்றம் வீசியது. 

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட கடையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக நங்கவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் கடை உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்து கடையில் சோதனை நடத்தினர். 

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இந்த பகுதிகளில் கண்காணிப்பில் இல்லாததால் பெரும்பாலான கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக அப்பகுதியில் உள்ள மக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selam children eat cake after vomiting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->