சேலத்தில் பரபரப்பு: ஆற்றில் இறங்கி தூய்மை பணியாளர்கள்! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் சேலம் மாநகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து திடீரென இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை பணி  நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வார விடுமுறை மற்றும் ஆயுள் காப்பீடு, விடுமுறை நாட்களில் வேலை செய்தால் இரட்டைப் சம்பளம் போன்றவற்றை அமல்படுத்த கோரியையும் வலியுறுத்தினர். 

இந்த போராட்டத்திற்கு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தலைமை தாங்கியனர். மழை நீர் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த போலீசார் சடம்பவ இடத்துக்கு வந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தாங்கள் ஆற்றில் இருந்து மேலே வரமாட்டோம் என தெரிவித்தனர். 

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து போலீசார் தூய்மை பணியாளர்கள் இடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கரைக்கு வந்தனர். 

இது தொடர்பாக தெரிவிக்கையில், 700க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியாளர் வேலை செய்து வருகிறோம். கடந்த மாதம் வரை மாநகராட்சி மகளிர் சுய உதவி குழு மூலம் மாதம் ரூ. 11 ஆயிரத்து 600 ரூபாய் கூலி வழங்கப்பட்டது. 

ஆனால் இந்த மாதம் ரூ. 9700 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு வழங்குவது போல் எங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும். 

மேலும் தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 selam Cleanliness workers suddenly into river protested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->