ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக் கொடி: போலீசார் அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்திற்கு வந்துள்ள ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டியவர்களை போலீசார் கைது செய்தனர். 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமான மூலம் சேலத்திற்கு வந்துள்ளார். 

மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெயகாந்தலுடன் ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்நிலையில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநர் சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு கட்சியினர் கருப்பு கொடி காட்டியதால் பெரும் பரபரப்பு நிலவியது. 

இதனால் இந்திய மாணவர் சங்கத்தினர், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். 

இதனை அடுத்து, ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் ஆளுநர் சேலத்தில் இருந்து கோவைக்கு செல்ல உள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selam Governor RN Ravi against Black flag


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->