செல்வமகள் சேமிப்பு திட்டம்: மூன்று நாள் சிறப்பு முகாம்!
Selva Magal Semippu thittam special camp
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு மேளா வரும் 21, 28 மற்றும் மார்ச் 10-ஆம் தேதிகளில் நடைபெறும்.
சென்னை நகர அஞ்சல் மண்டலத்தின் கீழ் சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில், அஞ்சலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்படும்.
2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்திய சுகன்யா சம்ரித்தி சேமிப்பு திட்டத்தில், இதுவரை 10 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ. 8,351 கோடி டெபாசிட் பெறப்பட்டுள்ளது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஆண்டுக்கு குறைந்தது ரூ. 250 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
இந்த திட்டத்தில், ஆண்டுக்கு அதிகபட்சம் 8.2% வட்டி வழங்கப்படுகிறது. மேலும், வருமான வரிச் சட்டம் 80-சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். 18 வயது முடிந்த பிறகு அல்லது 10-ம் வகுப்பு முடித்தவுடன், கணக்கில் உள்ள 50% தொகையை உயர் கல்விக்காக பெற அனுமதி வழங்கப்படுகிறது.
English Summary
Selva Magal Semippu thittam special camp