தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் சிக்கலா.? மனம் திறந்த செல்வப்பெருந்தகை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை ஏன் தாமதமாகிறது என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அவர், தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி ஆவதில் எந்த தாமதமும் இல்லை. தி.மு.க கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. கூட்டணி கட்சிகள் மகிழ்ச்சியோடு உள்ளோம். 

காங்கிரஸ் அகில இந்திய தலைமையை கொண்டுள்ளதால் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொலைபேசி மூலம் நடைபெற்று வருகிறது. 

எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் புரிந்துணர்வோடு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, ஆர் ஜே டி உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமையாது என்றார்கள் அங்கே எல்லாம் கூட்டணி உறுதியாகி உள்ளது. 

தமிழ்நாட்டில் தி.மு.க எங்களோடு மிக நட்பாக உள்ள கட்சி. இங்கு தொகுதி பங்கேட்டில் எந்த சிக்கலும் வராது. தி.மு.கவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. 

தி.மு.க-காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு மிக விரைவில் கையெழுத்தாகும் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaperunthagai speech goes viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->