#திருத்தணி || தமிழ்நாட்டில் 3வது பலி.. வாக்கு செலுத்த வந்தவர் உயிரிழப்பு!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வாக்கு செலுத்த வந்த கனகராஜ் என்ற 59 வயதாகும் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெமிலி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் வாக்கு செலுத்துவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். 

அப்போது அருகில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து எழுப்பி உள்ளனர். அப்போது உடலில் அசைவு இன்றி இருந்ததால் அவரை நூற்றி என்று ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சேலத்தில் வாக்கு செலுத்த வந்த இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது திருத்தணியில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் வாக்கு செலுத்த வந்து மயங்கி விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senior citizen diet in thiruthani in polling booth


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->