தேர்தல் ஆஃபர்.. நெசவாளர்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு வேட்பாளர் விவாத மேடை நிகழ்ச்சியானது அனைத்து தொழில் வணிகர் சங்கத்தின் சார்பில் ஈரோடு மாவட்டம் நசியனூர் சாலையில் உள்ள வணிகர் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் கே.என்.நேரு எ.வ.வேலு, பெரியகருப்பன், முத்துசாமி, செந்தில்பாலாஜி, த.மோ.அன்பரசன், மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி "விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 750 யூனிட் இலவசம் மின்சாரத்தை 1,000 யூனிட் ஆகவும், அதேபோன்று கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது போல் கைத்தறி நெசவாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த 200 யூனிட் மின்சாரத்தை 300 யூனிடாக உயர்த்தப்படும்.

விசைத்தறிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.40 என உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரூ.0.70 என குறைத்து அதற்கான ஆவணங்களில் முதல்வர் மு.க ஸ்டாலின் கையெழுத்து உள்ளார். தற்பொழுது இடைத்தேர்தல் நடப்பதால் தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்படும்" என அறிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில நெசவாளர்கள் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இது போன்ற அறிவிப்புகளை ஏன் வெளியிடவில்லை என முனுமுனுத்து கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியின் பேச்சை கேட்டவாறு அமர்ந்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthil Balaji said electric bill will be reduced for power looms


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->