செந்தில்பாலாஜி கைது | ஸ்டாலின் ஆலோசனை! நீதிமன்றத்தை நாடினாலும் வேலைக்கு ஆகாதே!
Senthilbalaji Arrest issue CM Stalin Meet
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.
உச்சபட்சமாக தமிழக வரலாற்றில் முதல் முறையாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 17 மணிநேரம் நடந்த இந்த சோதனைக்கு பின், இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சட்ட ரீதியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும், நீதிமன்றத்தை அணுகுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில்பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு கைது நடவடிக்கையில் சலுகை கேட்டு மட்டுமே தற்போது திமுகவால் நீதிமன்றத்தை நாட முடியும். காரணம் செந்தில்பாலாஜியின் வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமலாக்கத்துறைக்கு சாதகமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவிக்கின்றனர்.
English Summary
Senthilbalaji Arrest issue CM Stalin Meet