செந்தில்பாலாஜிக்கு ஜாமின்? நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
Senthilbalaji Bail Case SC Judgement sep 26
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளை வழங்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணை முடிந்து கடந்த மாதம் 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.
திடீர்திருப்பமாக செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்குகளை அமலாக்கத் துறை சார்ந்திருக்கப் போகிறதா? இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை அமலாக்கத் துறை கைவிடப்போகிறதா? என்று விளக்கம் கேட்டு தெரிவிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்துள்ளது. மேலும், நாளை உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்க உள்ளதா தெரிவித்துள்ளது.
English Summary
Senthilbalaji Bail Case SC Judgement sep 26