திடீர் திருப்பம்: செந்தில்பாலாஜியின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் - தள்ளிவைக்கப்பட்ட குற்றச்சாட்டு பதிவு!
Senthilbalaji case 02 july 2024
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு நடைபெற இருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியின் இந்த கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளது.
வழக்கும், பின்னணியும்:
சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்காத நிலையில், அவர்களுடைய ஜாமீன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க செந்தில் பாலாஜி மனு அளித்திருந்த நிலையில், இந்த மனுவை சென்னையில் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இன்று இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும்இதற்காக செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க உத்தரவிட்டுள்ளது.
English Summary
Senthilbalaji case 02 july 2024