செந்தில்பாலாஜி வழக்கு | ஒரே போடாக போட்ட அமலாக்கத்துறை! அனல் பறக்கும் உயர்நீதிமன்றம்!
Senthilbalaji case Chennai HC ED Side July 12
செந்தில் பாலாஜி கைது தொடர்பாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கின் இரண்டாவது நாள் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது.
அப்போது, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் புலன் விசாரணை செய்வது அமலாக்க துறையின் கடமை என்று, அமலகத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்தார்.
மேலும், அமலாக்கத்துறை தரப்பில், சொத்துக்களை முடக்க, சோதனை செய்ய, வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.
காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு அனுமதி மறுப்பது, புலன் விசாரணை செய்யும் அமலாக்க துறையின் கடமையை மறுப்பதாகும் என்று வாதம் வைக்கப்பட்டது.
ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்க துறையின் நடவடிக்கைகள் புலன் விசாரணை தான் என்றும், அமலகத்துறை விளக்கம் அளித்தது.
அமலாக்கத்துறை விருப்பம் போல் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூற முடியாது என்றும் தனது வாதத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது
எந்த அழுத்தத்திற்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கைது செய்ய விதி உள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தனது வாதத்தை முன் வைத்துள்ளது.
English Summary
Senthilbalaji case Chennai HC ED Side July 12