செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை செய்வது எப்போது?! தீர்ப்பில் ஒரு திருப்பம்! ஒரே மூச்சாக முடித்த நீதிபதி!  - Seithipunal
Seithipunal


செந்தில்பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரின் மனைவி மேகலா தொடர்ந்த வழக்கை, நீதிபதி கார்த்திகேயன் காலை முதல் மாலை வரை 6 மணி நேரம் தொடர்ச்சியாக இந்த விசாரித்து தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி கார்த்திகேயன் மதிய உணவு இடைவெளிக்கு கூட தனது இருக்கையை விட்டு எழுந்து செல்லவில்லை. தண்ணீர் கூட அருந்தவில்லை 

பிற்பகல் 1.30 மணிக்கு சுருக்கெழுத்தாளர் தீர்ப்பை எழுத, நீதிபதி கார்த்திகேயன் இருதரப்பின் வாதங்களையும் ஒப்பிட்டு, மாலை 4.30 மணிக்கு தீர்ப்பை வாசித்து முடித்துள்ளார்.

உங்கள் முன்பாக வாதிட எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் ஒரு வழக்கில் உங்கள் முன்பாக வாதிட ஆசைப்படுகிறேன் என்று, செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் கபில் சிபில் தெரிவித்தார்.

தீர்ப்பு விவரம் : 

* அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் அதிகாரிகளுக்கான அதிகாரம் இல்லை. ஆனால், கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்ய அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்ற கூறவில்லை. 

* செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அமலாக்கத்துறை அவரை கைது செய்ததும், அமர்வு நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைத்ததும் சட்டப்பூர்வமானது தான்.

* செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்ததும், ஒருநாள் கூட அவரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சி செய்யாதது ஏற்புடையது இல்லை.

* கைதுக்கான காரணத்தை தங்களுக்கு தெரிவிக்கவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு சொல்வதை ஏற்க முடியாது. 

* செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. 

* மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சையில் உள்ள காலகட்டத்தை நீதிமன்ற காவலாக கருதக்கூடாது. அவர் குணமடைந்த பின் காவலில் எடுத்து விசாரிக்கலாம்.

* செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஆட்கொணர்வு மனு ஏற்புடையல்ல என்று நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும்,  அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து காவலில் எடுத்து விசாரணை செய்வது என்பதை ஏற்கெனவே விசாரணை செய்த இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என்றும் நீதிபதி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji case Chennai HC Karthikeyan judgment Details


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->