கரூர் சொகுசு பங்களா! செந்தில்பாலாஜியின் தம்பி மனைவிக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!
Senthilbalaji Case ED notice issue to Ashoke kumar wife nirmala
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
வேலை வாங்கி தருவதாக பண மோசடி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மூன்றாவது நாளாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், அவரின் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், வாங்கி கணக்கு விவரங்கள் குறித்தும் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர் புறவழிச் சாலையில் கட்டி வரும் புதிய சொகுசு பங்களா குறித்த அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று, அமலாக்கத்துடன் இந்த சம்மனை அனுப்பி உள்ளது.
அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரை குறிப்பிட்டு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
English Summary
Senthilbalaji Case ED notice issue to Ashoke kumar wife nirmala