13 மாத சிறை, அறுவை சிகிச்சை, நோய்வாய்ப்பட்டு கிடக்கேன் - உச்சநீதிமன்றத்தில் குமுறிய செந்தில்பாலாஜி! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அன்று இரவே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட, அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த ஒரு வருடமாக புழல் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி நேற்று மதியம் ஏற்பட்ட, சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், வேலைக்கு பணம் பொற்றதாக தொடரப்பட்ட வழக்கு மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய வழக்கை வரும் 24ம் தேதி 3 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலிருந்து உடனே தன்னை விடுவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் வைத்தது.

மேலும், கடந்த 13 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டேன், இதய அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது. உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள்? எப்போது முடியும்? என்பது கடவுளுக்கு தான் தெரியும் என்று செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்தார்.

அப்போது, அறுவை சிகிச்சை செய்த ஒருவரை நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சரியில்லாதவர் என கூற முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து செந்தில் பாலாஜி பிணை கேட்டு தொடர்ந்த மனு மீதான விசாரணையை  நாளை மறுநாள் மதியம் மூன்று மணிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji Case SC 22 july 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->