செந்தில்பாலாஜி விவகாரம் | உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிரடி வாதம்! - Seithipunal
Seithipunal


அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும், மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இதனை அடுத்து, செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை செய்ய அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் அமலாக்கத்துறை வாதம் வைத்துள்ளது.

மேலும், ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜி மீது உள்ளது என்றும், நீதிமன்றக் காவலில் உள்ள செந்தில்பாலாஜி தொடர் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும், எனவே இந்த காலத்தை விசாரணை காலமாக கருதக்கூடாது என்றும் அமலாக்கத்துறை தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji case SC ED next move


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->