செந்தில்பாலாஜி வழக்கில், தமிழக அரசுக்கு நாள் குறித்த உச்சநீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், இந்த பணமோசடி வழக்கை இரு மாதத்தில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு புலனாய்வு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இறுதி விசாரணையை நிறைவு செய்ய கூடுதலாக 6 மாத கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆறு மாத அவகாசம் எல்லாம் வழங்க முடியாது, குறைந்தபட்ச கால அவகாசம் மட்டுமே வழங்க முடியும்.

எவ்வளவு கால அவகாசம் வேண்டும் என்பதை டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் இந்த விஷயத்தில் நேரடியாக வந்து கேட்கட்டும் என்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு தரப்பில் குறைந்தது 3 மாத கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதனையும் ஏற்கமறுத்த நீதிபதிகள், வரும் செப்டம்பர் 30 க்குள் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

செப்டம்பர் 30 க்குள் விசாரணையை முடிக்க தவறினால், எஸ்ஐடி இந்த வழக்கை விசாரணை செய்ய உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தமிழக அரசை கடுமையாக கண்டித்த நீதிபதிகள், ஒரு வழக்கை முடிக்க வேண்டும் என்று நினைத்தால் 24 மணிநேரம் போதும், முடிக்க கூடாது என்று நினைத்தால் 24 வருடம் கூட காலம் தாழ்தளம் என்றும் தமிழக அரசை நீதிபதிகள் விமர்சித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji case SC order to TNGovt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->