செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58வது முறையாக நீட்டித்து உத்தரவு!
Senthilbalaji Court Chennai
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டா ர்.
இதுகுறித்த வழக்கை விசாரணை செய்து வரும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 58வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 5ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் முதல் சாட்சியான சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமாரிடம் செந்தில் பாலாஜி தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கும், பின்னணியும்:
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
இவரின் ஜாமின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், விரைவில் அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரணை செய்துவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகளின் விசாரணை தொடக்கி நடந்து வருகிறது.
இதற்காக இன்று காணொளி மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கின் முதல் சாட்சியான கரூர் வங்கி கிளை மேலாளர் ஹரிஷ்குமாரிடம் அமலாக்கத்துறை தரப்பில் விசாரணை முடிந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Senthilbalaji Court Chennai