எஸ்.இ.டி.சி பேருந்துகளுக்கு பார்சல் முன்பதிவு எண் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகளில் பார்சல் மற்றும் கூரியரை குறைந்த கட்டணத்தில் அனுப்புவதற்கான பார்சல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக திருச்சி, மதுரை, நாகர்கோவில், கோவை உள்ளிட்ட இடங்களில் முன்பதிவு மையம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

இந்த மையங்களில் ஒரு கிலோவுக்கு நான்கு ரூபாய் வீதம் 20 கிலோவுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கான பார்சல் முன்பதிவு மையம் கோவையில் செயல்படுகிறது. கோவையில் இருந்து தமிழகம் முழுவதும் இயங்கும் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் தினமும் பார்சல் அனுப்பி வைக்கப்படுகிறது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தாலுகாவில், பல்லடம், காங்கயம், அவிநாசி, தாராபுரத்துக்கு அதிக அளவில் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் வந்து செல்கிறது. ஆனால் மாவட்டத்தில் உள்ள எந்த பேருந்து நிலையத்திலும் விரைவு பேரூந்துகளுக்கான பார்சல் முன்பதிவு மையம் இல்லை. அதுமட்டுமல்லாமல், பயணசீட்டு முன்பதிவு செய்வதற்கும் வழியில்லை. 

இதன் காரணமாக பொதுமக்கள் பலரும் இணையதளத்தில் பயணசீட்டு பதிவு செய்து விடுகின்றனர். அதேபோன்று பார்சல் அனுப்புவதற்கும் தனியார் கூரியர் நிறுவனத்தின் மூலம் கூடுதல் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், உயரதிகாரிகள் தலையிட்டு வர்த்தக நகரான திருப்பூரில் எஸ்.இ.டி.சி., பேருந்துகளுக்கான பார்சல் முன்பதிவு மையத்தை உடனடியாக துவங்க வேண்டும். 

குறைந்த கட்டணத்தில் பார்சல் புக்கிங் செய்ய வழியில்லாதது குறித்து, கோவை கோட்ட எஸ்.இ.டி.சி., அதிகாரிகளிடம் கேட்ட போது அவர் தெரிவித்ததாவது, "பார்சல் முன்பதிவுக்கு 94450 14435 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணுக்கு அழைத்தால் கிலோ எவ்வளவு, கோவையில் இருந்து எப்போது எந்தெந்த பகுதிக்கு பார்சல்களை அனுப்ப முடியும் என்பது குறித்து தகவல்களை அறிந்து கொள்ளலாம்" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

setc bus parcel booking number allounce


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->