7 பேர் உயிரிழந்த விவகாரம்.. மருத்துவமனை மீது உரிய விசாரணை தேவை.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.  

திண்டுக்கல்லில்சிட்டிமருத்துவமனைஎன்றதனியார்ஆஸ்பத்திரிஉள்ளது.இந்தமருத்துவமனை தரைத்தளத்தில் வரவேற்பு அறை, முதல்தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் உள்நோயாளிகள் வார்டு, 3-வது தளத்தில் நோயாளிகள் வார்டு, 4-வது தளத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்கும் அறை இருக்கிறது. இந்த ஆஸ்பத்திரியில் நேற்று 45 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் ஆஸ்பத்திரி வரவேற்பு அறையில் திடீரென 'டமார்' என்ற சத்தத்துடன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இந்த பயங்கர தீ விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. .மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் மருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நேற்று (12.12.2024) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் மரணமடைந்தனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மின் சாதனம் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்ட நோயாளர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிருக்கு போராடும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாடி கொண்ட மருத்துவமனை கட்டிடம் விபத்து கால நெருக்கடிகளை எதிர் கொள்ளும் வசதியும், விபத்து கால தடுப்பு சாதனங்கள் எளிதில் கையாளும் வசதியும் இருந்ததா என்பதை விசாரிக்க வேண்டும். விபத்தில் மரணமடைந்த குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது குடும்பங்களுக்கு, மருத்துவமனை நிர்வாகமும், அரசும் உரிய இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seven people were killed The hospital needs to be investigated Communist Party of India


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->