இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை! பா.ஜ.க நிர்வாகி தலைமறைவு! - Seithipunal
Seithipunal


பாஜக நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த  இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். போலீசார் அவரை கைது செய்ய தேடி சென்ற போது தலைமறைவானர். 

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). பா.ஜ.க நெல்லை தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவராக உள்ளார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். 

அந்த பகுதியில் தனது சொந்தமான தோட்டத்தில் காய்கறிகளை பயிரிட்டு அதைப் பறித்து சந்தைக்கு அனுப்பி வைப்பார். தினசரி கூலி அடிப்படையில் காய்கறிகளை பறிக்க அதே பகுதியில் உள்ள ஆண்களும், பெண்களும் அவரது தோட்டத்திற்கு வேலை பார்க்க செல்வார்கள்.

இதன்படி, அவரது தோட்டத்தில் வெண்டைக்காய் நன்கு காய்த்து விற்பனைக்கு தயாராக இருந்துள்ளது. இந்த வெண்டைக்காய்களை பறிக்க செல்வகுமார் அதே பகுதியைச் சேர்ந்த சில பெண்களை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதன் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி (35) என்ற பெண்மணியும், சமீபத்தில் இவரது  காய்கறி தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்கச் சென்றார். 

அங்கு வேலை பார்க்கும் சக விவசாய தொழிலாளர்களுடன் சரஸ்வதி வெண்டைக்காய் பறிப்பதை பார்த்த செல்வகுமார் அவரை அழைத்துள்ளார். அந்த பெண்மணியும் முதலாளி கூப்பிடுகிறாரே என்ற அடிப்படையில் அங்கு சென்றுள்ளார்.

அப்போது செல்வகுமார் சரஸ்வதியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து அவர் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் அடிப்படையில், ராதாபுரம் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்யச் நேரில் சென்றுள்ளனர். ஆனால் இதை அறிந்த செல்வகுமார் தலைமறைவானார். 

மேலும், வெண்டைக்காய் பறிக்கச் சென்ற பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகியால் ராதாபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual harassment of a young woman BJP executive absconding


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->